{"product_id":"kalaignar-ennum-manidhar-compiled-by-manaa","title":"Kalaignar Ennum Manidhar - Compiled by Manaa","description":"\u003ch2\u003e\u003cstrong\u003eKalaignar Ennum Manidhar - Compiled by Manaa\u003c\/strong\u003e\u003c\/h2\u003e\u003cp\u003e\u003cb\u003eAbout The Product:\u003c\/b\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஇந்நூலின் முற்பகுதியில் கலைஞரிடம் நேரடியாக எடுக்கப்பட்ட பேட்டிகள், நதிமூலம், தமிழகத் தடங்கள் போன்ற கட்டுரைகள், கலைஞர் கைதின் போதும், மறைந்தபோதும் எழுத்தாளர் மணாவால் எழுதப்பட்ட கட்டுரைகள், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன், செல்வி, கனிமொழி எம்.பி. போன்றவர்களுடனான சந்திப்புகள், முரசொலி மாறன், கலைஞரின் நண்பர் தென்னன் போன்றவர்களைப் பற்றிய பதிவுகள் என அனைத்தும் அடங்கியிருக்கின்றன.\n \n இரண்டாவது பகுதியில், தற்போது மணா இணைந்திருக்கிற ‘தாய்’ இணைய இதழில் கலைஞரைப் பற்றி வெளியான சுவாரஸ்யமான செய்திகள், திரைக்குரல் போன்ற பகுதிகள், கலைஞரின் முதல் தேர்தல், முதல்வர் பதவியில் அமர்ந்தபோது கிடைத்த எதிர்வினைகள் என்று பல செய்திகள் - கலைஞரைப் பற்றி ஆய்வு செய்கிறவர்களுக்கும், அவருடைய தொண்டர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\n \n மூன்றாவது பகுதியில், கலைஞரைப் பற்றிய மற்றவர்களுடைய பங்களிப்புகள். அதில் நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன், சோலை, திரைக்கலைஞர் சிவகுமார், வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், சுப.வீ., ப்ரியன், பவா செல்லத்துரை, சிற்பி கணபதி ஸ்தபதி, உதய் பாடகலிங்கம் போன்ற பலருடைய அனுபவம் சார்ந்த கட்டுரைகளும் பேட்டிகளும் இடம் பெற்றிருக்கின்றன.\n *\n கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல; கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது என்பதால். பூசாரியைத் தாக்கினேன். பூசாரி பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷம் ஆகிவிட்டதைக் கண்டிப்பதற்காக. இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால், அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்குப் பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில். படம் எடுக்கும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன.\u003c\/p\u003e\u003cp\u003e\u003cb\u003eProduct Details:\u003c\/b\u003e\u003c\/p\u003e\u003cli\u003e\n\u003cstrong\u003eLanguage: \u003c\/strong\u003eTamil\u003c\/li\u003e\u003cli\u003e\n\u003cstrong\u003eNo. of Pages: \u003c\/strong\u003e352\u003c\/li\u003e\u003cli\u003e\n\u003cstrong\u003ePublisher: \u003c\/strong\u003ePen Bird Publications\u003c\/li\u003e\u003cp\u003e\u003cstrong\u003eLegal Disclaimer : \u003c\/strong\u003eProduct color may slightly vary due to photographic lighting sources or your monitor settings.\u003c\/p\u003e","brand":"Pen Bird Publications","offers":[{"title":"Hardcover","offer_id":62813883793567,"sku":"9789347711732","price":24.04,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1857\/6931\/files\/KalaignarEnnumManidhar.jpg?v=1782538639","url":"https:\/\/www.distacart.com\/products\/kalaignar-ennum-manidhar-compiled-by-manaa","provider":"Dista","version":"1.0","type":"link"}