
About The Product:
நிறையப் பேரைப் பார்க்கிறோம். திறமைகள் இருக்கின்றன. உழைப்பு இருக்கிறது. எப்படியாவது முன்னுக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. இருந்தும் சிலர்தான் பிரபலமாகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வந்து தன்னைத் திடப்படுத்திக் கொள்கிறார்கள். உழைப்பு, திறமையோடு, திரும்பத் திரும்ப அலட்சியப்படுத்தப்படுவதைப் பொருட்படுத்தாமல் போராடுகிற குணம் இருப்பதாலேயே பிரபலமாவது சாத்தியமாகியிருக்கிறது என்பது ‘நதிமூலம்’ தொடருக்காகப் பலரது மூலத்தைத் தேடிப் போனபோது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. இந்தத் தொடர் ஒருவருடைய முன்னேற்றத்தின் பாதையை மட்டுமே சற்றுக் கதைத் தன்மை கலந்த நடையில் விவரிக்கிறது. முன்னேறும்போது அவர்கள் கையாண்ட தந்திரங்கள், கடக்க நேர்ந்த இருண்ட பக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டுவது இதன் நோக்கமல்ல. முன்னேறுவதற்குப் பின்னிருக்கிற வெறியும் பிடிவாதமும் கொண்ட உழைப்பைப் பதிவு செய்வதே இதன் நோக்கம். தமிழகத்தின் பிரபலங்கள் பிறந்த இடம் தேடி நடந்தோம். அங்கு அவர்களோடு வாழ்ந்தவர்களை வாழ்க்கைச் சரித்திரத்தின் வீதிகளில் சற்றே பின்னோக்கி அழைத்துச் சென்றோம். இந்தப் பணியில் சில நிமிடங்கள் சிலிர்ப்பானவை; சில பிரமிப்பானவை; சில நெகிழ வைத்தவை; சில மகிழ வைத்தவை.
Product Details:
Legal Disclaimer : Product color may slightly vary due to photographic lighting sources or your monitor settings.
Easy Picks